புதுகையில் குரூப் – 2 முதன்மை போட்டித்தேர்வுக்கு இலவச பயற்சி: விருப்பமுள்ளோர் பங்கேற்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும்  வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொகுதி-2 முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 22ம் தேதி செவ்வாய்கிழமை அன்று உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி நேரடியாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் அவ்வப்போது மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை degc.pk@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 2 =