புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக கோர்ட்டில் அவதூறு வழக்கு- அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில், 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை விதிக்கப்படுவதாகவும், 40 சதவீதத்துக்கு ஆயத்தீர்வை விதிக்கப்படவில்லை. இதுபோன்ற முறைகேடுகளால், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் புகார் அளித்தார். மேலும் புகாரையும், சில அவதூறு கருத்துக்களையும் கட்சியின் இணைய தளத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்துள்ளார். இவ்வாறு தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை ஆதாரம் இல்லாமல் சுமத்தியுள்ளதாக கிருஷ்ணசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ள கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் கூறி உள்ளார்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: