பீகாரில் 3 வருட சம்பளத்தை திருப்பி கொடுத்த பேராசிரியர் : எதற்கு தெரியுமா ?

பீகாரில் பேராசிரியர் ஒருவர் கொரோனா காலத்தில் 3 வருடங்கள் பாடங்கள் எதுவும் எடுக்காததால் ரூ. 24 லட்சம் சம்பளத்தை திருப்பி கொடுத்து உள்ளார்.

 பீகாரின் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றிவருபவர் லாலன் குமார் (33). இந்த கல்லூரி பி.ஆர்.அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாலன் குமார் 2019 செப்டம்பரில் பணியில் சேர்ந்ததில் இருந்து அவர் பெற்ற மொத்தச் சம்பளமான ரூ. 24 லட்சத்தை பல்கலைக்கழகத்திடம் திருப்பி அளித்து உள்ளார்.பலல்கலைக்கழக பதிவாளரிடம் குமார் ரூ.23,82,228 காசோலையை வழங்கினார்.

இதுகுறித்து லாலன் குமார் கூறியதாவது, பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் போது கூட (கொரோனா தொற்றுநோயின் போது), இந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்தனர். ஐந்து வருடங்கள் கற்பிக்காமல் சம்பளம் வாங்கினால் எனது கல்வி மரணமடைந்ததற்கு சமமாகும் என கூறினார். நிதிஷேஸ்வர் கல்லூரி 1970 இல் சுதந்திரப் போராட்ட வீரர் நிதிஷேஸ்வர் பிரசாத் சிங்கால் நிறுவப்பட்டது,. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலை மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மற்றும் எம்பில் முடித்த லாலன் குமார், கல்வித்துறையில் முதுகலை துறைக்கு இடமாற்றம் செய்ய விண்ணப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 2 =