பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்
வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம். வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை.

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றார். வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.