பா.ஜ., ஈரோடு கிழக்கு தொகுதி சக்தி கேந்திர ஆய்வுக் கூட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதியின் சக்தி கேந்திர ஆய்வுக் கூட்டம், ஈரோடு பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பூத் கமிட்டிகளை வலுப்பெற செய்வது என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் பழனிச்சாமி, வேதானந்தம், சுதர்சன், ஈஸ்வரமூர்த்தி, சிவகாமி மகேஸ்வரன், கிருஷ்ணவேணி ஆகியோருடன் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அணி பிரிவு தலைவர்கள், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 52 = 61