பால், மின்சார கட்டணம் உயர்வு கந்தர்வகோட்டையில் ஆர்ப்பாட்டம்

கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசின் மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து கந்தர்வக்கோட்டை ஒன்றிய தலைவர் தவமணி தலைமையில் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின்சார கட்டண உயர்வையும், பால் விலை உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் பழ.செல்வம் கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க., நிர்வாகிகள் தங்கவேல், கார்த்திகேயன், அருண், கமலக்கண்ணன்,  பவுன்ராஜ், சந்திரன், முத்துமணி, ராம்குமார், முத்துக்குமார், கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 6