பாலைவன பூமியை பசுமை வளமாக்கும் முக்குடி கிராம ஊராட்சி மன்ற தலைவர்

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது முக்குடி கிராமம். கிராம மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா, சிவகங்கை மாவட்டத்திலேயே விவசாயத்திலும், மண் வளங்களிலும், பின் தங்கியிருந்தது முக்குடி கிராமம். இக்கிராமத்தை பசுமை வளமாக்கி நிலங்களை மக்களோடு இணைந்து பசுமையான ஊராகவும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளிலேயே முதன்மையான ஊராட்சிகளாக உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து முக்குடி கிராம ஊராட்சி தலைவர் முத்தையா தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்திலேயே எங்கள் முக்குடி கிராமம் பாலை வனபூமியாக கருதப்பட்ட ஊராட்சி. நீர் வளத்திலும், நிலவளத்திலும் முன்னேற்றம் அடைய பொது மக்களுடன் இணைந்து கலந்து ஆலோசித்து எங்கள் ஊரில் உள்ள கண்மாயின் ஒரு பகுதியை அரசிடம் கேட்டு அதை பராமரித்து ஏராளமான மரங்கள், செடிகள் அமைத்து பசுமையான நிலங்களாக மாற்றி வருகிறோம்.

இந்த மாற்றத்திற்காக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வைத்து இந்த பசுமையான வளர்ச்சிக்கு பாடுபட்டு பசுமையான ஊராக மாற்றி வருகிறோம். சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்து எங்கள் வளர்ச்சியை கண்காணித்து, வேலையை கவனித்து, எங்களோடு ஆலோசித்து, முக்குடி கிராமத்திற்கு தேவையான அனைத்து பணிகளையும் அதிகாரிகளை வைத்து செய்து கொடுக்கிறார்.

கருவேலங்காடுகள் போல் இருந்த இந்த மண்ணில் முக்குடி கிராம மக்கள் உதவியுடன் வாழை மரங்கள், மருதாணி செடிகள், முருங்கை கீரை மரங்கள், பழச்செடிகள் மேலும் மூலிகைகள்  விதைகள் அமைத்து ஆயிரக்கணக்கான மரங்களை பேணிக்காத்து இந்த வளங்களை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு முத்தையா தெரிவித்தார்.

இப்பணிகளில் உறுதுணையாக இருந்த ஊராட்சி மன்ற செயலாளர் சுரேஷ் மற்றும் நிலவளங்களை பாதுகாக்கும் பொருப்பாளராக பணியாற்றக் கூடிய சென்னி மார்க்ஸ் இருவரையும் மக்கள் வெகுவாக பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − 47 =