புதுக்கோட்டை கவிநாடு மேற்கு ஊராட்சிக்குட்பட்ட பாரிநகரில் உள்ள அருள்மிகு பாரி விநாயகர் கோயிலில் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
இதையொட்டி பாரி விநாயகர் ஆலய அறங்காவலர் குழு சார்பில் 19 -ஆவது ஆண்டாக நடைபெற்ற அன்னதான விழாவில், கவிநாடு மேற்கு ஊராட்சிமன்றத் தலைவர் மணி மற்றும் பாரி நகர், மாலையீடு. சாரதா, கார்டன், சேங்கை தோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள், பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர். பங்குனி உத்திர நாளின் சிறப்புகள் குறித்து கோயில் அர்ச்சகர் மணி குருக்கள் கூறினார். விழா ஏற்பாடுகளை, அருள்மிகு பாரிவிநாயகர் ஆலய அறங்காவலர் குழு மற்றும், பாரி நகர் மக்கள் நலச்சங்க தலைவர் ஆர். செந்தில்தேவன், செயலர் ஆர். சேகர், பொருளாளர் கே. ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.