பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே நமது இலக்கு என எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி பேசியுள்ளார்.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்தும் நோக்கில், வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எனினும், கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டணி அமைக்கும் முயற்சியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.’வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடந்த இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்தக் கூட்டத்தில், 2024 லோக்சபா தேர்தல், விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது சோனியாகாந்தி பேசுகையில், 2024 லோக்சபா தேர்தலே நமது இலக்கு. நாம் ஒற்றுமையுடன் ஒரே சிந்தனையடன் செயல்பட வேண்டும். நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டோம். இந்த ஒற்றுமை தொடர்ந்திருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.அதே கருத்தையே வலியுறுத்தி மற்ற தலைவர்களும் பேசினர்.இந்தியாவில் இதுவரை இல்லாத வரலாற்று சாதனையாக 2024 லோக்சபா தேர்தலிலும் அதிகபடியான இடங்களில் வெற்றி பெற்று மூண்றாவது முறையாக நாட்ட்டை ஆள வேண்டும் என்ற அடிப்படையில் பாஜக செயல்பட்டு வருகின்றது குறிப்பிடதக்கது.
பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே நமது இலக்கு :காங்., தலைவர் சோனியா
