பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு ரூ.2கோடி ஊக்கப்பரிசு

டோக்கியோ ,’பாராலிம்பிக்’ எனப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, வெள்ளி வென்றார். மாரியப்பனுக்கு, தமிழக அரசு சார்பில், இரண்டு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.31) அறிவித்துள்ளார்.

மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கூறியது, பாராம்லிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துக்கள், சளைக்காத தன் திறமையால் வெள்ளி வென்றுள்ளார் மாரியப்பன். இளைஞர்களிடம் ஊக்கத்தை விதைக்கும் வகையில் விருதுகளை வென்ற மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு வழங்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்வேன் என்று உறுதியுடன் தெரிவித்துள்ள மாரியப்பன் தனக்குஅரசு வேலை வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.