பலரின் பாராட்டை பெற்றாலும் உதயநிதி ஸ்டாலின் பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது என நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார் .
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று .இதனையொட்டி உதயநிதி ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ”முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார் .