பாரத் ஜோடோ யாத்திரையின் போது விவசாயிகளின் வலியை உணர்ந்தேன் – ராகுல் காந்தி பேச்சு

பாரத் ஜோடோ யாத்திரையின் போது விவசாயிகளின் வலியை உணர்ந்தேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சத்தீஷ்கர் மாநிலம், நவராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மாநாட்டின் இறுதி நாளான இன்று ராகுல் காந்தி பேசினார். நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். எனது நாட்டிற்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நான் நடைபயணம் மேற்கொண்டேன். யாத்திரையின் போது என்னுடனும், கட்சியுடனும் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர். பாரத் ஜோடோ யாத்திரையின் போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் கேட்டேன். அவர்களின் வழியை உணர்ந்தேன்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2