பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருச்சி மாவட்ட பட்டதாரிகளுக்கான பேரவை உறுப்பினர் தேர்தலில் இந்திரா கணேசன் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் ராதிகா பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பேரவை உறுப்பினருக்கான ஆணையை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்.பேராசிரியர் ராதிகாவிற்கு வழங்கினார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் உடன் இருந்தனர். பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராதிகாவிற்கு இந்திரா கணேசன் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் ராஜசேகர் மற்றும் இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.