புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதியில் கடந்த ஆண்டு சரியான மழைப்பொழிவு இல்லாததால் சுமார் 10,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் கருகி நாசமானது,இசிஆர் சாலையை ஒட்டி உள்ள கிராமங்களான கட்டுமாவடியில் இருந்து அரசநகரி பட்டினம் வரை உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு உழுது விதை விதைத்து களை எடுத்து உரம் இட்டும் கதிர் வருகின்ற தருவாயில் கருகி நாசமானது.ஆனால் இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கப்படவில்லை .

அதனை கண்டித்து இன்று காலை 10 மணி அளவில் இசிஆர் சாலையில் மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை இதுவரை நடத்தி எந்த ஒரு நிவாரணமும் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படாதை கண்டித்து மீமிசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் எஸ்யூசிஐ கட்சியினுடைய அறந்தாங்கி பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செய்யானம் ஊராட்சி மன்ற தலைவர் மலையரசன்,கடவாக்கோட்டை விவசாயி சாத்தையா,விவசாய சங்க மாநில கமிட்டி உறுப்பினர் சுருளி ஆண்டவர் உள்பட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் மிமிசியில் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.