பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கு ரோபோட்: அரியலுார் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் நகராட்சி அலுவகத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளுக்கு வழங்கப்பட்ட ரோபோட் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நகராட்சி பயன்பாட்டிற்கு வழங்கினார்.

அரியலூர் நகராட்சியில் தற்போது செயல்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகளில் முக்கியமான பாதாள சாக்கடை ஆள் இறங்கும் தொட்டிகளை சுத்தம் செய்யத் தேவையான ரோபோட் இயந்திரத்தினை ஓ.என்.ஜி.சி., சென்னை நிறுவனத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அரியலூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோட் இயந்திரம் தேவையான அதிகபட்ச ஆழத்திற்கு ஏற்ப செயல்படுவது மட்டுமின்றி நீண்ட காலத்திற்கு திறம்பட உதவும். ஆழ்இறங்கும் குழிகளில் சுத்தம் செய்யும் நேரம் மற்றும் திறன் ஆகியவை மனிதர்களை விட அதிக திறமையாக சுத்தம் செய்யக்கூடியது.

மேலும், ஆள்இறங்கும் குழிகளிலிருந்து வெளிவரும் நச்சு வாயுவின் அளவையும் சரிபார்த்து அதற்கு ஏற்ப செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிப்பதுடன் விபத்துகளை தடுக்கும் வகையிலும் ரோபோட் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி,  நகர்மன்றத் துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, ஓ.என்.ஜி.சி., அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர் கிரன், பொது மேலாளர்கள் ஆறுமுகம், சுந்தரன், வெங்கட்ராமன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 59 =