பாண்டிச்சேரியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வந்த 20 டன் நெல் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பாண்டிச்சேரியில் இருந்து கொண்டுவரப்பட்ட 20 டன் நெல்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தற்போது குருவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்காக நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து மட்டுமே நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டுகளை வியாபாரிகள் கொண்டு வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதை தடுக்கவும் குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் உத்தரவுபடியும், திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மற்றும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன், உத்தரவு படியும், புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் வேம்பு மற்றும் காவலர்கள் தேவதயவு ஆகியோர் இரவு வாகன தணிக்கை செய்த போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமாரசாமி அழகு என்பவரின் மகன் ராஜீவ் காந்தி என்பவர்.TN31 H 1711 லாரியில் சுமார் 20 டன் நெல்லை உரிய ஆவணம் இன்றி பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு வந்தவரை பிடித்து எஸ் ஆர்எம்க்கு தகவல் தெரிவித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அழியா நிலை கிடங்கில் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =