பாஜக கோவை மாநகர் மாவட்ட கணபதி மண்டல் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகம்

பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாநகர் மாவட்டம் கணபதி மண்டல் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை யுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் கணபதியில் அமைந்துள்ள SES பள்ளி வளாகத்தில்  சங்கரா கண் மருத்துவமனையின் உதவியோடு இலவச கண் பரிசோதனை முகாமினை சிறப்பு விருந்தினராக ஜிஎம் சுப்பையன்,ses பள்ளி தாளாளர் ரமேஷ் ,பூவை தங்கம் ஆகியோர்  துவக்கி வைத்தார் .மேலும் கோவை மாநகர மாவட்ட செயலாளர் மோகனா ஏற்பாட்டில் விழா நடைபெற்றது.முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை மற்றும் பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி  அவர்களின் 5 லட்சம் ரூபாய்க்கான இலவச காப்பீட்டுத் திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் கணபதி மண்டல் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் நவீன், சோபனா, பிரியா சிவகுமார்,விஜயன், சிவகுமார் , ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சபரி கிரிசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.