பாஜக அரசை கண்டித்து அறந்தாங்கி எம்எல்ஏ தலைமையில் மக்கள் விழிபுணர்வு பிரச்சார பயணம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து எம்எல்ஏ ராமசந்திரன் தலைமையில் மக்கள் விழிபுணர்வு பிரச்சார பயணம் நடைபெற்றது.

மக்கள் விரோத நடவடிக்கையால் பொருளாதாரம் அழிக்கப்பட்டு கடும் விலைவாசி உயர்வால் அவதிபடும் மக்களுக்காக விழிபுணர்வு பிரச்சார பயணத்தை இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியா முழுவது நடத்தி வருகிறது. நவம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை 8 நாட்களுக்குள் இந்தியா முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் நடத்தவேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளர். எனவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இந்ந பேரணி நடைபெறுகிறது. அதனே தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிபுணர்வு பயணம் நடைபெற்றது.

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமசந்திரன் தலைமையில் அறந்தாங்கி செக்போஸ்டில் துவங்கி பேருந்து நிலையம் காமராஜர் சிலை வரை நடைபெற்ற பேரணியை திருமயம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ராம சுப்புராம் துவங்கிவைத்தார்.நகர தலைவர் வீராசாமி, பஷீர் அலி, வட்டார தலைவர்கள் சரவணன், முத்து, முருகன், விஸ்வநாதன், ஆகியோர் முன்னிலையில் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கோசமிட்டு நடந்து சென்ற இந்த பேரணியில் விவசாய அணி மாநில துணை தலைவர் செல்வரத்தினம், மன்னர் முகம்மது. முரளி, சுப்பிரமணி, முத்துகாமாச்சி, கணேசன், மதியழகன், ரெங்கசாமி, சந்தானம், கிருபாகரன், மோகன், தன்ராஜ், விஜய், பெரியசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

98 − 96 =