பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரச்சாரத்தின் போது நீதித் துறையைச் சேர்ந்தவர்களுக்கும், போலீஸாருக்கும் மிரட்டல் விடுத்த வழக்கு, பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது வெளிநாட்டுப் பயணத்தில் முக்கியப் பிரமுகரிடமிருந்து பெற்ற பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்காமல் தனது சொந்த கணக்கில் சேர்த்த வழக்கு என்று 9 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளன.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் போலீஸார் அவரது இல்லம் சென்றனர். தொடர்ந்து இம்ரான் கான் இல்லத்தை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

அதன்பின் இம்ரான் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தன்னை கடத்தி படுகொலை செய்ய பாகிஸ்தான் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். இந்த நிலையில் தன்மீதான 9 வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கேட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இம்ரான் கானுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழக்கி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை தொடர்ந்து இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

98 − = 97