பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி

பாகிஸ்தானில் மலைப் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டி நகரில் இருந்து க்யூட்டா நகரை நோக்கி பஸ் ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் 33 பயணிகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், டனிசார் பகுதியில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அங்கிருந்த சாலையோர மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் இருந்த 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

80 + = 88