பாகிஸ்தானில் சீக்கிய அரசர் சிலை சேதம் – இந்தியா கண்டனம்

பாகிஸ்தானில் சீக்கிய அரசர் ரஞ்சித் சிங் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 லாகூரில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங் சிலை சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் தறை தெரிவித்துள்ளது.

 பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள், கலாசார மையங்கள், தனியார் சொத்துகள் சூறையாடப்படுவது வேகமாக அதிகரித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது. சிறுபான்மையினர் நலன் மற்றும் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது