பழனியில் தேசிய தலைவர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 64 வது நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் பழனியை சுற்றியுள்ள பகுதிகளான, நெய்க்காரபட்டி, கோதைமங்கலம், பாலசமுத்திரம்,மருத்துவ நகர், ஆகிய பகுதிகளில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து, வேலூர் இந்திரா நகரில் லட்சுமண பெருமாள் தலைமையில், இமானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர் லட்சுமண பெருமாள், 9வது வார்டு கவுன்சிலர் காளி, பழனி மணி, சுரேஷ், பாபு, ஆறுமுகம்,முருகன், கருப்புசாமி, திவாகர், கிருஷ்ணன், பூபதி ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.