பள்ளி மேலாண்மை குழு மாதாந்திர கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சூர் ஊராட்சியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சார்பில் மாதாந்திர கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் குல்சார் பேகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி கட்டிடங்களுக்கு வண்ணம் பூசுவதற்கு முன்னாள் மாணவர்கள் அன்பளிப்பாக நன்கொடை அளித்தனர். மேலும் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றி கூறினார். இக்கூட்டத்தி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + = 7