பள்ளி ஆசிரியை மன அழுத்தத்தால் தற்கொலை

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவர், மன அழுத்தம் காரணமாக குந்தன்புரி பகுதியில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஹம்பிரான் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவரது தற்கொலை கடிதத்தை மீட்ட போலீஸார், அதில் அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருப்பதாக கூறினார்கள்.

46 வயதான அந்த பெண் திருமணமாகாதவர் என்றும், உடல்நிலை சரியில்லாத அவரின் தாயை கவனித்து வந்தார் என்றும் போலீசார் தெரிவித்தனர். அப்பெண்ணின் தந்தை நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார் என்றும், அவரது சகோதரரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்றும், அனைவரும் தனியாக விட்டுவிட்டதற்காக தன் தாயிடம் “மன்னிப்பு” கேட்பதாகவும் தனது தற்கொலை குறிப்பில் அப்பெண் எழுதியிருக்கிறார்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜீந்தர் சிங் கூறுகையில், “அப்பெண் மதியம் 1 மணியளவில் பள்ளியிலிருந்து திரும்பி நேராக தனது அறைக்கு சென்றார். பின்னர் அக்கம் பக்கத்தினர் சிலர் மொட்டை மாடியில் தீப்பிடித்து எரிவதைக் கண்டனர். அவர்கள் அவரை காப்பாற்ற விரைந்தனர், ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார்  என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 6 =