பள்ளிகள் திறப்பு : பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணிகள் தீவிரம்

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடி இருந்த நிலையில் வருகின்ற  செப்டம்பர் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு மட்டும்  வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா நோய்த்தொற்று காரணத்தால் நீண்ட நாட்களாக வகுப்பறைகள் மூடிய நிலையில் இருந்ததால்,  செப்டம்பர் மாதம் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்கள், மேல் நீர் தேக்கத் தொட்டி ஆகியவற்றை தூய்மை செய்யும் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றன.

இப்பணியினை செய்ய  பள்ளியின் தலைமை ஆசிரியை கே.இளங்கோதை திருநாவலூர் ஊராட்சி செயலாளர் முருகன்  உதவியோடு 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களும் சேர்த்து  பள்ளியில் உள்ள வகுப்பறைகளை  சுத்தம்  செய்தல், மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள புற்கள் மற்றும் செடிகள் அகற்றுதல், தண்ணீர் தொட்டி ஆகியவற்றை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணியின் போது உதவித் தலைமை ஆசிரியர் அருள்மணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜசேகரன், முதுகலை ஆசிரியர்கள் ஜெய்சங்கர், பாலகுரு, எட்வின், தங்கராஜ், உடற்கல்வி ஆசிரியர் அன்புச் சோழன் ஆகியோர் உடன் இருந்தனர்.