பள்ளத்தூர் சீதாலக்ஷ்மி ஆச்சி மகளிர் கல்லூரியில் நேற்று தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவின் சார்பில் இறுதியாண்டு மாணவிகளுக்கான தொழில் முனைவு ஊக்குவிப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் விஜயராணி தலைமையுரை ஆற்றினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுவன மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் வேதிராஜன் சந்தை உத்திகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். புதுக்கோட்டை இந்தியன் வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வி தொழில் முனைவோருக்கு அரசாங்கத்தில் உள்ள நலத் திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சியாளர் ரூபன் புதிய தொழில் தொடங்கும் திட்டம் மற்றும் நிதி பெறும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் மாணவிகளிடையே கலந்துரையாடினார். தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எலிசபெத் ராணி கருத்தரங்கினை ஒருங்கிணைத்து வழி நடத்தி சென்றார். தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவின் உறுப்பினர் விஜய சந்திரிகா நன்றியுரை கூறினார். நாட்டுப் பண்ணுடன் கருத்தரங்கு நிறைவுற்றது.