பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.112.72 கோடி நிவாரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 112 கோடியே 72 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டு, 33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரமும்; நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − = 45