மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த விமானி ஒருவர் உயிரிழந்தார்.
வியாழன் இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில், விமானத்தில் இருந்த மற்றொரு பயிற்சி விமானி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கோயில் மற்றும் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று சோர்ஹாட்டா காவல் நிலையப் பொறுப்பாளர் ஜேபி படேல் தெரிவித்தார். “இந்த விபத்தில் கேப்டன் விஷால் யாதவ் (30) உயிரிழந்தார் என்றும், பயிற்சி விமானி அன்ஷுல் யாதவ் காயமடைந்து அரசு நடத்தும் சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றும் தெரிவித்தார்.