“பயிற்சியும், முயற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம்” முனைவர் சுரேஷ்குமார் பேச்சு

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி, தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் பணியமர்த்தல் மையமும், “புதுக்கோட்டை தன்னார்வ பயிலும் வட்ட அறக்கட்டளையும்” இணைந்து நடத்திய IAS/TNPSC/ வங்கி போட்டித் தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள் தொடக்கவிழா இன்று மன்னர் கல்லூரியில் நடைபெற்றது.
தொடக்கவிழாவிற்கு மன்னர் கல்லூரி முதல்வர் திருச்செல்வம் தலைமை வகித்தார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மேனாள் மண்டல இணை இயக்குனர் முனைவர் சுரேஷ் குமார், போட்டித் தேர்வுக்கான இலவச வகுப்புகளைத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

தன்னார்வ பயிலும் வட்டம் என்பது 1994ஆம் ஆண்டு சிறிய அளவில் புதுக்கோட்டை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட்டது. (இந்த திட்டத்தை முதலில் தொடங்கியது ப.சுரேஷ்குமார் ) படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களை போட்டித் தேர்வுக்கு உரிய பயிற்சி கொடுத்து தயார் செய்வது இதன் நோக்கம். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் தற்போது எல்லா வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் உள்ளது. கர்நாடகாவில் கூட நம்மை பின்பற்றி இதைத் தொடங்கியுள்ளனர். அப்படி தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்து இப்போது அரசுப்பணியில் இருப்பவர்கள் பலரும், தம்மைப்போல் பலரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டுள்ளதுதான் இந்த அறக்கட்டளை.
தற்போது அரசுப்பணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால் போட்டிகள் பலமாக உள்ளது.

அப்படி இந்த போட்டித் தேர்வில் வெற்றிபெற பயிற்சியும், முயற்சியும் தொடர்ச்சியாக இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். எந்த பின்புலமாக இருந்தாலும் தொடர்ந்த முயற்சி இருந்தால் வெற்றி உறுதி. அதற்கு இந்த இலவச வகுப்புகளுக்கு வந்து பயிற்சி பெற்று சமீபகாலங்களில் வேலைவாய்ப்பைப் பெற்று பணியிலிருக்கும் 200க்கு மேற்பட்டவர்கள் சாட்சி. எனவே தொடர்ந்து நடைபெறும் இந்த இலவச வகுப்புகளுக்கு வந்து பயிற்சி பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக மன்னர் கல்லூரி தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் பணியமர்த்தல் மைய பொறுப்பாளர் முனைவர் சு.கணேசன் , போட்டித் தேர்வுகள் குறித்த அறிமுகவுரையோடு, இந்த இலவச பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் மன்னர் கல்லூரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், போட்டியாளர்கள் இதை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இது முற்றிலும் இலவசம் என் தம் கூறினார்.
புதுக்கோட்டை, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் போட்டித் தேர்வு குறித்து விளக்கவுரை ஆற்றினார். தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயிற்சி தற்போது வருமானவரி அலுவலராக இருக்கும் சுரேஷ்குமார், உதவி கருவூல அலுவலர் புவனேஷ்வரன் மற்றும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் பயின்று தற்போது அரசுப்பணியில் இருக்கும் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.முன்னதாக சென்னை மாநகராட்சி (தணிக்கை) ஆய்வாளர் சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக அ.சோனைக் கருப்பையா , தனி வட்டாட்சியர் (பறக்கும் படை) புதுக்கோட்டை, நன்றி கூறினார். இன்றைய இப்பயிற்சி வகுப்பில் 350 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 − = 21