பயணிகளுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் முகக்கவசம்: இண்டிகோ ஏர்லைன்ஸ்க்கு அபராதம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களால் முகக் கவசம் தயாரித்து பயணிகளுக்கு வழங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலமாக விமானத்தில் பயணிப்பவர்களுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் மூலம் முகக்கவசம் தயாரித்து வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த முக கவசத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலமாக ஆய்வு மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அடுத்த 7 நாட்களுக்குள் 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டும் என இண்டிகோ ஏர்லைன்ஸ்க்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

29 − 19 =