பனங்குளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு குளிர்சாதன வசதி செய்துகொடுக்க நீர்வள ஆதார துறை உதவிப் பொறியாளர் முடிவு: ஆசிரியர்கள் மாணவர்கள் வரவேற்பு

பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் ஜெ. தங்கராசு தலைமை வகித்தார். இரா. செந்தில்குமார் உதவி பொறியாளர், நீர் ஆதார துறை பராமரிப்பு முன்னிலை வகித்து நீர் நிலைகளை பராமரித்து பாதுகாத்து நீர் ஆதாரங்களை பெருக்கவேண்டியதன் அவசியம் பற்றி விளக்கி சிறப்புரை ஆற்றி பள்ளியில் தொழில்நுட்ப வகுப்புகள் இயங்கும் வகுப்பறைகளுக்கு குளிர்சாதன வசதியினையை நன்கொடையாக செய்துதர பள்ளி மேலாண்மை குழுவினர்கள் வைத்தகோரிக்கையை உதவி பொறியாளர் செந்தில்குமார் மகிழ்ச்சியோடு செய்து தருவதாக உறுதியளித்தார்.தலைமையாசிரியர் ஆ.கருப்பையா கொரோன தடுப்பு உறுதிமொழியை கூறி தடுப்பூசி, தனிநபர் இடைவெளி, சமூக இடைவெளி, முக்கவசம் அணிதல் பற்றி விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறி சோப்பு போட்டு கைகழுவும் முறைகள் பற்றி செயல்விளக்கம் அளித்தார்.

வில்லுனி ஆற்றின் குறுக்கே பனங்குளம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை சுற்றி சீமை கருவேல் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இப்பகுதியில் நெகிழிப்பைகள் போன்ற குப்பைகளும் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளதால் நீண்ட காலமாக நீர்வரத்து தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் உயர்வும் பாதிக்கப்படுவருகிறது.

சீமைக்கருவேல் மரங்கள், நெகிழிப் பொருட்கள் போன்றவைகளை அகற்றும் பணியில் ஊராட்சி மன்றத் தலைவர், உதவிப் பொறியாளர்,பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் ஊர் மக்களுடன் இணைந்து ஈடுபட்டனர். பள்ளிக்கு ஊராட்சி நிதியிலிருந்து சுற்றுச்சுவர் மற்றும் ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர், நுழைவாயில், விழாமேடை போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக ஊராட்சி மன்றத் தலைவர் உறுதியளித்தார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் இரா.ராஜேஷ், சு.ரவிசங்கர்,சா.ராஜன் ஆகியோர் மேற்கொண்டார்கள்.இரா.இளங்கோ ஆசிரியர் நன்றி கூறினார்