பணபரிவர்த்தனை செய்யும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதி இந்திய தனிக்கை தினமாக கொண்டாடி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக அனைத்துத் துறை தலைவர்கள் மற்றும் பணபரிவர்த்தனை செய்யும் அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி காரைக்கால் பி.எட்., கல்லூரியில் பேரவைத் தலைவர் செல்வம்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் . சந்திரபிரியங்கா, சட்டமன்ற உறுப்பினர் நாஜீம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முதன்மை கணக்காய்வு தலைவர்  ஆனந்த் (தமிழ்நாடு மற்றும் புதுவை) மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் மற்றும் கணக்காய்வு துறை அதிகாரிகள் துறை தலைவர்கள் பண பரிவர்த்தனையில் ஈடுபடும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு கணக்காய்வுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மேலும் கணக்கு சம்பந்தமான கோப்புகளை கையாளும் விதம் குறித்தும் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 5 =