பணத்தை பறிக்கும் ஓலா, ஊபர் செயலிகளை தடை செய்க:  தமிழக முதல்வருக்கு தேசிய முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் ஜி.ஜி.சிவா வேண்டுகோள்

தேசிய முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகரங்களில் வாழும் மக்கள் குடும்பமாக வெளியில் செல்ல வேண்டு மென்றால், கார் கட்டாயம் என்ற நிலை தற்போது உருவாகி வருகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கார் வாங்குவதற்கு, பதிலாக பெரும்பாலும் வாடகை கார்கள், ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். நகர பகுதி மட்டுமின்றி கிராமபுறங்களிலும் வாடகை கார், ஆட்டோக்களை பயன்படுத்துவது அதிகரிக்க தொடங்கிவிட்டது.

சாலைகளுக்கு சென்று கார், ஆட்டோ வாடகைக்கு எடுப்பதற்கு பதிலாக வீட்டில் இருந்து ஆப் மூலம் புக்கிங் செய்வதை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் ஆப்களின் கார், ஆட்டோ சேவைகளை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆரம்பகால கட்டத்தில் ஓலா, ஊபர் உள்ளிட்ட பல்வேறு ஆப்கள் அறிமுகம் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தன. தற்போது ஆப்களின் மூலம் சேவைகளை புக் செய்யும் போது, கார் ஓட்டுநருக்கு வழங்கப்படும் கட்டணத்தை ஆன்லைன் ஆப்கள் சரிவர வழங்குவது கிடையாது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் ஆப்கள் சனி, ஞாயிறு, இரவு, மழை உள்ளிட்ட நேரங்களில் மட்டுமில்லாது பீக் ஹவர் என்று தனிதனியே தங்கள் இஷ்டத்திற்கு ஆன்லைன் ஆப்களில் கார், ஆட்டோ கட்டணம் அசாதாரணமாக உயர்த்தி வாடிக்கையாளர்களிடம் பணத்தை அபகரிக்கின்றன. ஓலா, ஊபர் ஆப்களில் கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை குறிப்பிட்ட இடத்திற்கு வாடிக்கையாளர் செல்வதற்கு புக் செய்யும் போது  இந்த ஆப்களில் குறிப்பிட்ட தொகையை காட்டி வந்தன.

வாடிக்கையாளர்கள் தங்கள் செல்லும் இடத்தை சென்றயடையும் போது புக் செய்யும் ஆன்லைன் ஆப்களில் குறிப்பிட்ட தோரயமான தொகை தான் வந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்கள் புக் செய்யும் போது ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் ஆப்களில் தோரயமாக காட்டும் தொகையை விட குறைந்த பட்சம் 50 முதல் 100 வரை அதிகமாக வாடிக்கையாளர்கள் சென்றடையும் இடங்களுக்கு செல்லும் போது ஆன்லைன் நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

கார், ஆட்டோவிற்கு கிலோ மீட்டர் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டுமென தமிழக அரசு வரைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால், தமிழக அரசின் இந்த விதிகள் எதையும் ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் ஆப்கள் பின்பற்றாமல், வாடிக்கையாளர்களிடம் அதிகப்படியான பணத்தை வசூலிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன.ஆகவே, வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடிக்கும் ஓலா, ஊபர் போன்ற ஆன்லைன் ஆப்களை தமிழகத்தில் தடை செய்ய திமுக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தனியார் கார், ஆட்டோ ஓட்டுநர்களை கொண்டு கேரளா சவாரி என்ற ஆன்லைன் ஆப்பை கேரள அரசு துவங்கியுள்ளது. இது போன்று தமிழகஅரசு சார்பில் தனியார் கார், ஆட்டோ ஓட்டுநர்களை கொண்டு நியாமான விலையில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் சேவையை துவங்க வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன். என தேசிய முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 61 = 62