பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு 20 சதவீதம் கூலி உயர்வு,பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

சேலம் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கூலி உயர்வு மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலான இவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  அவர்கள் அடிப்படை கூலி 10 சதவிகிதமும் அகவிலைப்படி 10 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் கூலி உயர்வு வழங்கி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சங்க நிர்வாகிகள் சாந்தாராம் சீனிவாசன் ரவிச்சந்திரன் பிரபு மற்றும் விஜயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சங்க நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இது வைத்து அந்த சங்கத்தின் தலைவர் பிரகாஷ் கூறுகையில் கூலி உயர்வு அகவிலை படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தற்போது தங்களது 10 ஆண்டு கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிப்படை கூலி 10% மற்றும் அகவிலைப்படி 10 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் கூலி உயர்வு வழங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு தங்களுக்கு தீபாவளி பொங்கல் விழாவை கொண்டாடுவது போல் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கு உறுதுணையாக இருந்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் அக் ராஜேந்திரன் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் காந்தி அவர்களுக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கொரோனா  பாதிப்பால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த பட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த 20 சதவிகித கூலி உயர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்ததோடு இந்த இக்கட்டான காலகட்டத்தில் கூலி உயர்வு வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.