பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் தமிழக அரசின் கோவிட் தடுப்பூசி முகாம்

பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் தமிழக அரசின் கோவிட் தடுப்பூசி முகாம் பட்டுக்கோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆர்.டி.ஓ பாலசந்தர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை நகராட்சி ஆணையர் கே.சென்னுகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயபாரதி விசுவநாதன், மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வாளர் ரவிச்சந்திரன், மதிமுக நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மதிமுக நகர துணை செயலாளர் சரவணன், மதிமுக பொருளாளர் கார்த்தி, திமுக சதீஷ், சிவகுமார், மதிமுக பிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.