பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவம் குற்றவாளிகள் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடைவிதித்து கோர்ட்டு உத்தரவு

பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த சம்பவத்தில் குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டியலினத்தவர்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும், இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம். இனி பொருட்கள் தரமாட்டார்கள் என வீட்டில் போய் சொல்லுங்கள் என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாண்மை என கூறப்படும் மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். குமார், சுதா, முருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கோவையில் இருந்த குமார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரும் 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டு நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 − 75 =