பஞ்சாப் மாநிலத்தை சேந்த 20 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

 பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், லூதியானாவில் 20 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து அங்கு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், லூதியானாவில் 2 பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக துணை ஆணையர் விகே சர்மா தெரிவித்துள்ளார்.

எனவே அந்தப் பள்ளிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் தினமும் 1,500க்கும் மேற்பட்ட மாணாவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும் சர்மா தெரிவித்தார்.

தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டு வருகின்றன. சுமார் 50 சதவிகித பள்ளி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக நிதி ஆயோக்கின் உறுப்பினர் விகே பால் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களும் முன்களப்பணியாளர்கள்தான் என தெரிவித்துள்ள விகே பால், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.