பச்சை பூமி அமைப்பின் சார்பில் இம்மனாம்பட்டி அரசுப் பள்ளிக்கு புத்தகங்கள் வழங்கல்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இம்மனாம்பட்டியில் ‘பச்சை பூமி’ அமைப்பின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியை தேன்மொழி தலைமையில் முதுகலை ஆசிரியர் குணசேகரன், ஆசிரியர் பாஸ்கர் முன்னிலையில் பச்சை பூமி புரவலர் ஆண்டனி, மாணவர்கள் படித்துப் பயன் பெறுவதற்கான தலைவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கினார். எட்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்துவிட்ட தகவலையும் தலைமையாசிரியை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆரோக்கிய பேப்டிஸ்டா, கணேசன், இராஜதுரை, பிரிட்டோ அலெக்சாண்டர், வில்லியம், தங்கராஜ், சுகப்பிரியா, தமிழரசி, ஆகியோர் கலந்து கொண்டார்கள்.