புதுக்கோட்டை இந்திரா நகரில் தேநீர் கடை நடத்தி வரும் வம்பன் சிவகுமார் தேநீர் கடைகாரர் மட்டுமல்ல. சமூக நிலை கண்டு உள்ளபூர்வமாய் உதவும் நல்ல மனித நேய மாண்பாளரும் ஆவார். கொரோனா கால கட்டத்தில் வாடிக்கையாளரின் சிரமம் அறிந்து கடன்களை யெல்லாம் தள்ளுபடி செய்து நற்பணியாற்றியவர். ஏழைகளுக்கு உதவிகள் பச்சிளம் குழந்தைகளுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பால் ஈழத்தமிழருக்கு மொய் விருந்து வைத்து பொருளாதார உதவியென தொடர்ந்து சமூக நலனில் அக்கறை கொண்டு செயலாற்றும் தேசப்பாற்றாளர்.

தற்போது பசுமை தேச கனவோடு மரக்கன்றுகளை கடந்த நான்கு ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறார். அவ்வகையில் நடைபெற்ற இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா தேநீர் கடையில் நடைபெற்றது. இதில் 2019ம் ஆண்டு மரக்கன்று பெற்று மரமாக வளர்த்து சாதனை புரிந்த கொத்தக்கோட்டை செந்தில் மாஞ்சன்விடுதி கருப்பையா ஹரிபாஸ்கர் பாப்பான்பட்டி அறிவொளி வீரையா வம்பன் முருகேஷ் மங்கணாம்பட்டி கிருஷ்ணன் மாஞ்சன்விடுதி அன்னபூரணி பாண்டிதேவி போன்றோருக்கு பரிசாக சில்வர் குடம் ஹாட் பாக்ஸ் வழங்கப்பட்டது.மூச்சுகாற்றை கொடுப்பது மரந்தான் ஆனால் அதை மனிதன்தான் மறந்தான் என்ற கூற்றை பொய்யாக்கி கர சேவையாய் மர சேவையாற்றிவரும் சிவகுமாரை அனைவரும் பாராட்டி சென்றனர். விழாவில் புதுக்கோட்டை கார்த்திக் அபிராமி மெட்டல்ஸ் தட்சிணாமூர்த்தி நாடியம்மாள் முத்துக்குமார் ஆலங்குடி இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி போன்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
