நைஜீரியாவில் பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 6 பேர் பலி

நைஜீரியாவில் பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று பேருந்து மீது ரெயில் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அரசு ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற பஸ் ஒன்று லாகோசில் உள்ள இகேஜா பகுதியில் இன்ட்ரா-சிட்டி ரெயில் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 6 பேர் உயிரிழந்தனர். 84 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயிலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பஸ் டிரைவர் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நகரங்களில் பொதுவாக போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இது போன்ற விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன. நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோசில், விபத்துக்களைத் தடுக்க சமீப ஆண்டுகளில் கடுமையான அபராதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது கடுமையான பிரச்சனையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =