நேரு யுவகேந்திரா சார்பில் இளையோருக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி

இந்திய அரசு புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோருக்கான பேரிடர் மேலாண்மை குறித்த ஒரு வார கால பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்படி நேரு யுவகேந்திரா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இளைஞர்கள் கொண்ட ஒரு குழு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிக்காக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை படை பயிற்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 14 .11. 2022 முதல் 19.11.2022 வரை ஒரு வார காலம் இவர்கள் அனைவருக்கும் பேரிடர் மேலாண்மை குறித்த  அனைத்து வகையான பயிற்சிகளும் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை பட்டாலியன் 04 சார்பில் அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள மணமேல்குடி ஒன்றியத்தைச் சார்ந்த நேரு யுவகேந்திரா இளைஞர் நற்பணி மன்ற பிரதிநிதிகள் 15 பேர் புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டனர். இவ்விளையோர் அனைவரையும் புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஜோயல் பிரபாகர், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சூரிய பிரபு, மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் சதாசிவம், நேரு யுவகேந்திரா திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம், தேசிய இளையோர் தொண்டர் தேர்வு குழு உறுப்பினர் சரவணன், குழந்தைகள் நல குழு உறுப்பினர் கிருத்திகா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் வீரமுத்து, சமூக சேவகர் மனோகர் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =