நெல்லை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலி

அம்பை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உயிரிழந்தார்.

அம்பையில் பாரத் ஸ்டேட் பாங்க் எதிரில் ஓட்டல் நடத்தி வருபவர் பீர்முகம்மது ஹக்கீம்(35). இவர் பக்ரீத் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் சிவா(29), கோபி (24) மற்றும் ராஜேஷ் (28) ஆகியோர் வந்த காரை சிவா ஓட்டிவந்துள்ளார். அப்போது கார் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பீர்முகம்மது ஹக்கீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அம்பை கவல் துறையினர் சிவா,கோபி, ராஜேஷ் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

33 − = 24