நெல்லையில் ரூ.330 கோடியில் நலத்திட்டங்கள் உதவிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்கிறார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அதன்படி நாளை நெல்லைக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள் இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவருக்கு விமான நிலையத்தில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கார் மூலம் கன்னியாகுமரி சென்ற அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று அவருக்கு தேசிய கொடி வழங்கி யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.

நாளை காலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.ரூ.330 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நெல்லை மாநகராட்சி சார்பில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடிவடைந்துள்ள 5 பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். பாளை மனக்காவலன்பிள்ளை சாலையில் ரூ.3.06 கோடியில் பழமை மாறாமல் கட்டப்பட்டுள்ள மேடை போலீஸ் நிலையம், அதே சாலையில் ரூ. 9.88 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சேவை மையம், ரூ.15.12 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள வ.உ.சி. மைதானம், ராமையன்பட்டியில் 2 மெகாவாட்டில் முடிக்கப்பட்டுள்ள 2 சோலார் பேனல் மையங்களை தொடங்கி வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

91 − 82 =