நெய்வேலி கிராமத்தில் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாப சாவு

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே நெய்வேலி கிராமம், மேட்டு தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (69). இந்த மூதாட்டி நேற்று தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவ்வழியே சென்ற மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டு ஓடி வந்து மூதாட்டியை முட்டி கீழே தள்ளியது. இதில், படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது கூக்குரலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் சீனிவாசன் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

26 + = 32