
நெதர்லாந்து நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலுக்கு மானியம் வழங்குவதை கண்டித்து சூழலியல் ஆர்வலர்கள் 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
நெதர்லாந்தின் ஏ12 நெடுஞ்சாலை வழியாக ஹேக் நகருக்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூழலியல் ஆர்வலர்கள் அணிவகுத்து சென்றனர். அப்போது போலீசாரின் எச்சரிக்கையை மீறி சூழலியல் ஆர்வலர்கள் சிலர், போக்குவரத்தை தடுக்க முயன்றனர்.
இதையடுத்து தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். நெதர்லாந்து அரசாங்கம் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலுக்கு மானியம் வழங்க பொது நிதியை பயன்படுத்துவதை நிறுத்தும் வரை போராட்டங்களை நடத்த போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.