நீலகிரி, , புதுக்கோட்டை உள்ளிட்ட் 7 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தென்மேற்குப் பருவக்காற்று மற்றும்‌ வெப்பச் சலனம்‌ காரணமாக நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது இதை தொர்ந்து தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கும், டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழையும் பெய்யக்கூடும்‌.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.