நீர்பாசன சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வினர் விஜயபாஸ்கரிடம் ஆசிபெற்றனர்

நீர்பாசன சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் பாசன குளங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவோருக்கான நீர் பாசன தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ஆவுடையார்கோவில் ஒன்றியங்களை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான விஜயபாஸ்கரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தைச் சேர்ந்த பெருநாவலூர் பெரிய ஏரி வளையான் ஓடை நீர் பாசன தலைவராக வீர சேகரன் (எ) சிவா, குண்டகவயல் ஊத்தானிக்காடு கன்மாய் நீர் பாசன சங்க தலைவராக உமா புஸ்பராஜ். கறம்பக்குடி ஒன்றியம் கருக்காங்குறிச்சி கீழத்தெரு நெடுவுடையான் குளம் நீர்பாசன சங்க தலைவராக தேவராஜ்,  தெற்கு தெரு ஊராட்சி புங்கன் குளம் நீர்பாசன சங்க தலைவராக பிரசாத் பாலு, தேர்தல் மூலம் தங்களை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அ.தி.மு.க., நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து வெற்றி சன்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்ற நீர் பாசன தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 3 =