நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குலமங்கலத்தில் உடைய பராசக்தி அம்மன் கோயில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப்பட்டி அருகே உள்ள குலமங்கலத்தில் உடைய பராசக்தி அம்மன் கோயில் தேரோட்டத் திருவிழா 23 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்ற உத்தரவின் படி விமர்சையாக நடைபெற்றது, வானவேடிக்கை மங்கல இசை முழங்க பெண்கள் குலவையிட்டு முளைப்பாரி எடுத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆட்டம் பாட்டத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நச்சாந்துப்பட்டி அருகே உள்ள குலமங்கலத்தில் உடைய பராசக்தி அம்மன் கோயில் உள்ளது.‌ இந்த கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்ந்து வருகிறது.‌ இந்நிலையில் இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.‌ இந்நிலையில் குலமங்கலம் மற்றும் மேலப்பனையூர் உள்ளிட்ட இரண்டு கிராமங்களுக்கு இடையிலான பிரச்சனையால் கடந்த 23 ஆண்டு காலமாக கோயில் திருவிழாவும் தேரோட்டமும் நடைபெறாமல் இருந்த நிலையில் கோயில் திருவிழா நடத்த கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது குலமங்கலம் கிராமத்தினரை எந்தவித பிரச்சனையும் இன்றி தேரோட்டம் திருவிழாவை நடத்த நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து எப்போதும் ஆடி மாதம் நடைபெறும் தேரோட்டம் திருவிழா நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் காலம் கடந்து புரட்டாசி மாதத்தில் நீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு குலமங்கலம் உடைய பராசக்தி அம்மன் கோயில் திருவிழா கடந்த எட்டு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று மாலை தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையடுத்து பராசக்தி அம்மன் வீதி உலாவாக சென்று முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள தேர் முன்பு குவிந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மங்கல இசை வான வேடிக்கை முழங்க பெண்கள் சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.‌

மேலும் இந்த தேரோட்டத்தை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, குலமங்களம் ஊர் தலைவர் சுப்பிரமணியன் தேவர் உள்ளிட்டோர் தேரை வடபிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். மேலும் தேர் முன்பு மண் கலசத்தில் பெண்கள் முளைப்பாரி எடுத்து‌ குலவையிட்டு சென்றனர்.‌‌ மேலும் இந்த தேரானது கோயில் முன்பு உள்ள நான்கு வீதிகளையும் சுற்றி பின்னர் நிலை நின்றது.மேலும் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தேரோட்டம் திருவிழா நடைபெறுவதால் பல ஆண்டு காலமாக சந்திக்காத உற்றார் உறவினர்கள் அந்த கிராமத்திற்கு வருகை தந்த நிலையில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சி பொங்க நலம் விசாரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 + = 74