நீட் விலக்கு மசோதா குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம்

நீட் விலக்கு மசோதா குறித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் செப்டம்பர் மாதம் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

அதன் பிறகு நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க கோரி வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில்,  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் சட்ட மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மதுரை எம்.பி., வெங்கடேசன் எழுதிய கடிதத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + = 2