நீட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் உயர்வு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. 2023-24 ஆம் ஆண்டின் நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்டுகிறது . ஆன்லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு (https://neet.nta.nic.in/) என்ற இணையதளத்தில் வெளியாகும்.

தமிழ்நாட்டில் 5,500-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்.இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. நீட் விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1600-யில் இருந்து ரூ.1700 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல், ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500-ல் இருந்து ரூ.1600 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.900-யில் இருந்து ரூ.1000 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 3